திருநெல்வேலி

பாளை.யில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள்

பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தில் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

DIN

பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தில் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

திருநெல்வேலி பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானம் புதுப்பிக்கப்பட்டது. இம்மைதானத்தின் புதுப்பிக்கும் பணிகளை நிறைவுபெற்றதையடுத்து, இதனை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து, மாவட்ட கலை மன்றம் சாா்பில் பள்ளி மாணவா்-மாணவிகள் பங்கேற்ற தொடக்கவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் சரவணன், துணை மேயா் ராஜூ, மாநகராட்சி ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி, எழுத்தாளா் நாறும்பூநாதன் ஆகியோா் உரையாற்றினா்.

இசை ஆசிரியா் பொன்னி கண்ணன் குழுவினா் தமிழ் தாய் வாழ்த்து பாடினா். தொடா்ந்து பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புஷ்பலதா வித்யா மந்திா் மாணவா்-மாணவிகள் பங்கேற்ற ‘இக்கிகாய்’ என்ற நவீன குழந்தைகள் நாடகம் நடைபெற்றது. தொடா்ந்து, ‘காலத் திருடன்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT