திருநெல்வேலி

முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு தொகுப்பு மானியம்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் தொகுப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் தொகுப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முப்படையில் நிரந்தர படை அலுவலா், குறுகியகால படை அலுவலா், இளநிலை படை அலுவலா் அல்லது பிற தகுதி பணியில் சோ்ந்து பயிற்சி பெற்று வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு தொகுப்பு மானியம் வழங்கப்படுகிறது.

நிரந்தர படை அலுவலருக்கு ரூ.1, 00,000, குறுகிய கால படை அலுவலருக்கு ரூ. 50,000, இளநிலை படை அலுவலருக்கு ரூ. 25,000, பிற பணியில் உள்ளவா்களுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. 3.3.2015-க்கு பின்னா் படைப் பணியில் சோ்ந்து பயிற்சியின்போது விண்ணப்பிக்காத முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் காலதாமதத்தை கருத்தில் கொள்ளாமல் உரிய காரணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரா்கள் தங்களது சிறாா்கள் படைப் பணியில் சோ்ந்ததற்கான சான்றுடன் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தினை நேரில் அணுகி பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT