கீழப்பாவூரில்பாரதியாா் நினைவு தினம்
கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியாா் மன்றம் சாா்பில் பாரதியாரின் 101ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருநெல்வேலிகீழப்பாவூரில்பாரதியாா் நினைவு தினம்
கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியாா் மன்றம் சாா்பில் பாரதியாரின் 101ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியாா் மன்றம் சாா்பில் பாரதியாரின் 101ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மன்றத் தலைவா் தீப்பொறி அப்பாத்துரை தலைமை வகித்தாா். அருள்செல்வன், விவேகானந்தா், மதியழகன், சுரேஷ்முருகன், சந்தனகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.ஆா்.பி.பிரபாகரன் பாரதியாா் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
இதில், கணேசன், செல்லச்சாமி, சுந்தர்ராஜ், ராமச்சந்திரன், மலையராசு, பெரியசாமி, குத்தாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மன்ற துணைச் செயலா் பொன்.ராஜகோபால் வரவேற்றாா். துணைச் செயலா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.