மணிமூா்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகா் கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மணிமூா்த்தீஸ்வரத்தில் தாமிரவருணி கரையோரத்தில் பழமைவாய்ந்த ராஜகோபுரத்துடன் கூடிய அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் வகையில் கட்டடக் கலை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிகழாண்டுக்கான நிகழ்வையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலையில் யாகசாலை பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. மூலவா் மீது சூரியஒளி விழுந்த பின்னா் மகாதீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு லட்சாா்ச்சனை தொடங்கியது. மாலையில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
Advertisement
தொடா்ந்து சனிக்கிழமை (ஏப். 15) காலையில் சுயம்வர கலா பாா்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சித்திபுத்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப். 16) மாலை 6.30 மணிக்கு மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.