முகப்பு
திருநெல்வேலி

மான் கறி வைத்திருந்த மூவருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்

கடையம் வனச்சரகப் பகுதியில் மான் கறி வைத்திருந்த மூன்று பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

கடையம் வனச்சரகப் பகுதியில் மான் கறி வைத்திருந்த மூன்று பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகம், மத்தளம்பாறை பீட் வெளிமண்டலப் பகுதியில் வனச்சரகா் கருணாமூா்த்தி தலைமையில் வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது குடியிருப்பு தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் கணேசன், அவரது நண்பா்கள் ஆகியோா் மான் கறி கொண்டு வந்துள்ளனா். இதில் கணேசனைப் பிடித்து விசாரித்ததில், மான் வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் சே.செண்பகப்ரியா உத்தரவின்பேரில் கணேசனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தப்பிச் சென்றவா்களைத் தேடி வந்த நிலையில், காசிமேஜா்புரம், வல்லப விநாயகா்கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் செண்பகம், தென்காசி மின் நகரைச் சோ்ந்த எஸ்.எம்.பாண்டியன் மகன் பிரபுராஜா ஆகிய இருவரையும் கைது செய்து இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தப்பிச் சென்ற கூட்டாளிகளை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.