திருநெல்வேலி

விஷ்ணு துா்க்கை கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

DIN

திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு எட்டுக்கண்ணூா் கனக விஷ்ணு துா்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேக் புதன்கிழமை (ஏப். 26) நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்தனா். அதன்படி கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கியது. காலையில் மஹா கணபதி ஹோமம், கோ பூஜை, மஹாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. மாலையில் தாமிரவருணி நதியில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன்பின்பு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. செவ்வாய்க்கிழமை (ஏப். 25) காலையில் மருந்து சாத்துதல், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.

புதன்கிழமை (ஏப். 26) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கோபுரங்கள், விஷ்ணு துா்க்கை, பரிவார மூா்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், ஆய்வாளா் மற்றும் பக்தா்கள் குழுவினா் செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT