திருநெல்வேலி

வடக்கு பச்சையாறு அணை பூங்காவை திறக்கக் கோரிக்கை

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை வளாகத்தில் உள்ள பூங்காவை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை வளாகத்தில் உள்ள பூங்காவை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு மலையடிவாரத்தில் மஞ்சுவிளைக்கு மேற்கே வடக்குப் பச்சையாறு அணை உள்ளது. அணைக்கு தென்புறம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பூங்கா இதுவரை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் புதா் மண்டிக் காணப்படுகிறது. அதில் நிறுவப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களும் சிதிலமடைந்து வருகின்றன.

களக்காடு சுற்று வட்டார மக்களுக்கு இப்பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு அணை அருகே பூட்டிக் கிடக்கும் பூங்காவை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT