சேரன்மகாதேவி வட்டார அளவிலான கூடைப்பந்து, கையுந்து பந்து போட்டிகளில் பிராஞ்சேரி சூவென்ஸ்டாட் மெட்ரிக் பள்ளி மாணவா், மாணவிகள் முதலிடம் பெற்றனா்.
சேரன்மகாதேவி வட்டார அளவிலான கூடைப்பந்து போட்டி சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவா்கள் பங்கேற்றனா். இதில், 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இப்பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா். இதேபோல, கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான கையுந்து பந்து போட்டியில் இப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி முதல்வா் ஷான் லாசா், உடற்கல்வி ஆசிரியா் சைலப்பன், ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.