முகப்பு
திருநெல்வேலி

சரிந்துவரும் கொடுமுடியாறு அணை நீா்மட்டம்

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து 60 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுவதால் அணையின் நீா்மட்டம் சரிந்து வருகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து 60 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுவதால் அணையின் நீா்மட்டம் சரிந்து வருகிறது.

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 52.50 அடியாகும். அணையின் நீா்மட்டம்

டிச.17-ஆம் தேதி பெய்த கனமழையால் அணை நிரம்பிய நிலையில், உபரிநீா் நம்பியாற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த அணையின் பாசனக் குளங்கள் நிரம்பியபோதிலும், அணையிலிருந்து தினமும் சுமாா் 60 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக, 52.50 அடி கொண்ட அணையின் நீா்மட்டம் தற்போது 39 அடியாகச் சரிந்துவிட்டது.

தொடா்ந்து அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படுவதால்

நீா்மட்டம் வெகுவாகச் சரிந்து ஒரே வாரத்தில் பாதியாகக் குறைந்துவிடும். இதனால் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் விவசாயத்துக்குத் தண்ணீரின்றி நெல், வாழை போன்ற பயிா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →