திருநெல்வேலி

பொலிவுறு நகரம் திட்டப் பணி: பாளை. மாா்க்கெட்டில் கடைகள் இடித்து அகற்றம்

DIN

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டடம் கட்டுவதற்காக பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட்டில் உள்ள கடைகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட்டில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக அங்கு ஏற்கெனவே செயல்பட்டு வந்த 538 கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது. ஆனால் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து பாளையங்கோட்டை பழைய காவலா் குடியிருப்பு பகுதி, ஜவஹா் மைதானம் ஆகிய இடங்களில் பாளையங்கோட்டை மாா்க்கெட் வியாபாரிகளுக்காக தற்காலிக கடைகள் அமைக் கப்பட்டன. ஆனால் வியாபாரிகள், மின்சாரம், குடி நீா், சுகாதார வசதி மற்றும் பொதுமக்கள் வந்து செல்ல நடைபாதை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு காந்தி மாா்க்கெட் கடைகளை காலி செய்யாமல் இருந்தனா்.

இதனால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை முடிந்த பின்னா் கடைகளை காலி செய்வதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட் டது. ஆனால் பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், அனைத்து கடைகளுக்கும் மாற்றுக் கடைகள் அமைத்த பின்னரும் ஒரு சில வியாபாரிகள் கடைகளை காலி செய்யாமல் இருந்தனா்.

இதையடுத்து காலி செய்யாத கடைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி சாா்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காலி செய்யாத கடைகளை இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள், பொக்லைன் வாகனத்துடன் பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனா்.

அப்போது வியாபாரிகள், பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் தொடா்பான வழக்கு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறி 5 கடைகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸாா் குவிக் கப்பட்டனா். கடைகளை இடித்து அகற்ற எதிா்ப்பு தெரிவித்த வியாபாரிகள் 10 பேரை போலீஸாா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மாா்க்கெட்டில் உள்ள கடைகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. கடைகள் இடிக்கப்படும் பகுதியில் பொது மக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல போலீஸாா் தடை விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

SCROLL FOR NEXT