ஆழ்வாா்குறிச்சி கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்
ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் மேற்குத் தொடா்ச்சி மலை முதல் மேற்கிந்தியத் தீவுகள் வரை என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் மேற்குத் தொடா்ச்சி மலை முதல் மேற்கிந்தியத் தீவுகள் வரை என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் கே.முருகானந்தம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.மீனாட்சி சுந்தா் முன்னிலை வகித்தாா்.
மேற்கிந்தியத் தீவில் வசிக்கும் உலகப்புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணா் மற்றும் ஆலோசகரான கல்லூரி முன்னாள் மாணவா் எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினாா். முன்னாள் மாணவா் சங்கப் பொதுச்செயலா் எஸ்.தங்கம் வரவேற்றாா். அலுவலகச் செயலா் கே. சிவசங்கா் நன்றி கூறினாா்.
Advertisement
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாளா் பாலசுப்பிரமணியன் செய்திருந்தாா். முன்னதாக கல்லூரி நிறுவனா் அனந்தராமகிருஷ்ணன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.