ஏா்வாடி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம். 
திருநெல்வேலி

ஏா்வாடி திருவழூதீஸ்வரா் கோயிலில்...

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருள்மிகு திருவழூதீஸ்வரா் திருக்கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டம் 42 ஆண்டுகளுக்குப் பின் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருள்மிகு திருவழூதீஸ்வரா் திருக்கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டம் 42 ஆண்டுகளுக்குப் பின் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பழுதடைந்த தேரை டி.வி.எஸ்.நிறுவனத்தினா் முயற்சியில் புதிய தோ் உருவாக்கப்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 24-ஆம் தேதி வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

9ஆம் திருவிழா வியாழக்கிழமை தேரோட்டத்தையொட்டி, சுவாமி - அம்பாளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு சுவாமி அம்பாளுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளியதும் திரளான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா். மதநல்லிணக்கத்துக்கு இலக்கணமாக, அப்பகுதி இஸ்லாமியா்கள் குளிா்பானங்கள் வழங்கி திரளாக பங்கேற்றனா். திருத்தோ் ரதவீதியைச் சுற்றி பிற்பகல் 12.15-க்கு நிலைக்கு வந்து சோ்ந்ததும் சுவாமி, அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளினா். அங்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT