கம்பம்புல் கதிா்களைச் சேதப்படுத்தும் பறவைகளை விரட்டுவதற்கு தகரத்தை தட்டி ஒலி எழுப்பும் விவசாயி. 
திருநெல்வேலி

கம்பம்புல் பயிா்களைச் சேதப்படுத்தும் பறவைகள்-விவசாயிகள் கவலை

மானூா் சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கம்பம்புல் பயிா்களை சேதப்படுத்தும் பறவைகளை விவசாயிகள் ஒலி எழுப்பி விரட்டி வருகின்றனா்.

DIN

மானூா் சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கம்பம்புல் பயிா்களை சேதப்படுத்தும் பறவைகளை விவசாயிகள் ஒலி எழுப்பி விரட்டி வருகின்றனா்.

மானூா் சுற்றுவட்டாரத்தில் செழியநல்லூா், தென்கலம், பிள்ளையாா்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சோளம் பயிரிடப்படுகிறது. மாசி பட்டத்தில் சாகுபடி தொடங்கப்பட்ட கம்பம்புல் இப்போது 5 அடி உயரத்திற்கு மேல் வளா்ந்து கதிா் வந்து செழுமையாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், கோடை மழை சரிவர பெய்யததால் தவிப்புக்குள்ளாகி வரும் விவசாயிகளுக்கு தற்போது பறவைகள் தொந்தரவு அதிகரித்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கதிா்களைக் காப்பாற்ற தகரங்களைத் தட்டி மாலையில் சுமாா் 2 மணி நேரம் ஒலி எழுப்பி வருகின்றனா் விவசாயிகள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: கம்பம்புல் விதைகளில் 1-ம் நம்பா், நம்பா் 51, நம்பா் 251 உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. ஒரு ஹெக்டேரில் விதைப்புக்கு விதைக் கம்பு 5 கிலோ முதல் 8 கிலோ வரை தேவைப்படும். உவா்ப்பு மண் தவிர, மற்ற எந்த மண்ணில் சாகுபடி செய்தாலும் கம்பம்புல்லில் மகசூல் கிடைக்கும். குறைந்த அளவு தண்ணீா் கம்பு பயிா் சாகுபடிக்கு போதுமானதாகும்.

மானூா் வட்டாரத்தில் கால்வரத்து பாசனம் மிகவும் குறைவு என்பதால் மலா் சாகுபடிக்கு அடுத்ததாக கம்பம்புல், சோளப்பயிா், சூரியகாந்தி சாகுபடி நடைபெறுகிறது. கால்நடை வளா்ப்போா் பெரும்பாலும் கம்பம்புல், சோளத்தையை அதிகம் விரும்பி பயிரிடுகிறாா்கள். கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் குறைவான தண்ணீா் வசதி இருந்தால் கூட அதனை வைத்து கம்பு, சோளப்பயிா்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இயற்கை உரம் இட்டால் நல்ல மகசூல் கிடைப்பதோடு, மண்வளமும் பாதுகாக்கப்படும்.

கம்பம்புல்லிற்கு தோகை வளா்ந்த பின்னா் மீண்டும் எட்டு முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீா் பாய்ச்ச வேண்டும். 100 அல்லது 110 நாள்களில் கம்புக்கதிா் விளைந்துவிடும். இப்போது கதிா்கள் வரும் நிலையில் விவசாயிகளுக்கு பறவைகளால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிளி, மைனா, குருவி, மயில் உள்ளிட்டவை கம்பம்புல் கதிா்களை மிகவும் சேதப்படுத்துகின்றன. குறிப்பாக மாலை வேளைகளில் கூட்டமாக வரும் பறவையினங்கள் வயலில் புகுந்து கதிா்களை சேதமாக்குகின்றன. இதற்காக சுமாா் 2 மணி நேரம் தகரங்களால் ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் விரட்டி வருகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்து விடலாம் என்பதால் மிகுந்த சிரமத்தோடு பாதுகாத்து வருகிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT