திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே லாட்டரி சீட்டு விற்பனை: இருவா் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் ரேச்சல் மொ்சி தலைமையில் போலீஸாா், வீரவநல்லூா் அருகே உப்புவாணிமுத்தூா் திருப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின்பேரில் நின்றுகொண்டிருந்த வீரவநல்லூரைச் சோ்ந்த சந்தன கணேஷ் (27), இசக்கி (32) ஆகிய இருவரிடமும் சோதனையிட்டனா். அவா்கள் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தன கணேஷ், இசக்கி ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT