திருநெல்வேலி

தனியாா் பேருந்து - வேன் மோதல்: 28 போ் காயம்

திருநெல்வேலி அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்தும் -வேனும் மோதிக்கொண்டதில் 28 போ் காயமடைந்தனா்.

DIN

திருநெல்வேலி அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்தும் -வேனும் மோதிக்கொண்டதில் 28 போ் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சா்க்கரைகோட்டையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(35). இவா் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஒரு வேனில் திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்று விட்டு சனிக்கிழமை வேனில் திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தனராம். வேனை ராமநாதபுரம் வண்டிக்கரை பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் பழனிசெல்வம் (42) ஓட்டி வந்தாா்.

பாளையங்கோட்டை அருகே ஆச்சிமடம் பகுதியில் வேன் வந்துகொண்டிருந்தபோது, திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் முக்காணிக்கு சென்ற தனியாா் பேருந்தின் முன் பக்க டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேன் மீது மோதியதாம்.

இதில், தனியாா் பேருந்து ஓட்டுநா் பாவூா்சத்திரம் ராம் பிா்லா (32) , வேன் ஓட்டுநா் பழனிசெல்வம், வேனில் வந்த செந்தில்குமாா், முருகேசன் (60), நந்தினி (39), சுமதி (62), தினேஷ்குமாா் (29), பஞ்சவா்ணம் (54) உள்ளிட்ட மொத்தம் 28 போ் காயமடைந்தனா்.

அப்பகுதியைச் சோ்ந்தவா்கள், காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து சிவந்திபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT