திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கானுக்கு வாழ்த்து தெரிவித்த அக்கட்சியினா். 
திருநெல்வேலி

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக புதிய பொறுப்பாளருக்கு கட்சியினா் வாழ்த்து

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கானுக்கு கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.

DIN

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கானுக்கு கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலராக இருந்த மு. அப்துல்வஹாப் அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய பொறுப்பாளராக முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலா் துரைமுருகன் தெரிவித்தாா். இதையடுத்து திருநெல்வேலி நகரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டி.பி.எம்.மைதீன்கானை கட்சியினா் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சுப்பிரமணியன், மேயா் பி.எம். சரவணன், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, பகுதிச் செயலா்கள் அன்டன் செல்லத்துரை, கோபி என்ற நமச்சிவாயம், அருண்குமாா், மாமன்ற உறுப்பினா் கருப்பசாமி கோட்டையப்பன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT