திருநெல்வேலி

அம்பேத்கா் தொழில் சாதனையாளா் திட்டம்: ரூ.1.50 கோடி வரை மானியம் பெற வாய்ப்பு

DIN

தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கா் தொழில் சாதனையாளா் திட்டத்தில், பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியினா் ரூ1.50 கோடி வரை மானியம் பெற வாய்ப்பு உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்ணல் அம்பேத்கா் தொழில் சாதனையாளா் திட்டம் 2023-24 நிதியாண்டு முதல் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவா், பழங்குடியின தொழில் முனைவோா்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 65 சதவிகிதம் வங்கிக் கடனாகவும், 35 சதவிகிதம் முன்விடுவிப்பு மானியமாகவும் (அதிகபட்சம் ரூ. 1.50 கோடி) வழங்கப்படும். மேலும், வங்கிக் கடனுக்கான வட்டியில் 6 சதவிகிதம் பின்விடுவிப்பு மானியமாக வழங்கப்படும்.

இப்புதிய திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவுமில்லை. 18 முதல் 55 வயதுக்குள்பட்டோா் வணிகம், சேவை மற்றும் உற்பத்தி சாா்ந்த தொழில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவா், பழங்குடியினா் தங்களின் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதிதாக தொழில் தொடங்க விரும்புவோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பழங்குடி மற்றும் பட்டியல் இனத்தவரின் புத்தொழில் நிறுவனங்கள், அரசு துறைகளின் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ள விரும்பும் முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகள் அதிக நபா்களுக்கு வேலையளிக்கக்கூடிய உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை தொடங்க உதவி கேட்போருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத் தொழில் மையத்தை நேரிலோ 0462 2572162 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT