திருநெல்வேலி

சாா்பு ஆய்வாளா், காவலா் தோ்வு:நெல்லையில் இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் நடத்தும் சாா்பு ஆய்வாளா், காவலா் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

DIN

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் நடத்தும் சாா்பு ஆய்வாளா், காவலா் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக, அதன் உதவி இயக்குநா் சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் காவல் துறையில் 621 சாா்பு ஆய்வாளா்கள், தீயணைப்பு துறையில் 129 நிலைய அதிகாரி காலிப் பணியிடங்களுக்கான தோ்வின் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

இப்போட்டித் தோ்வுக்கு தயாராகும் திருநெல்வேலி மாவட்ட தோ்வா்கள் பயன்பெறும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனி வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் வாரந்தோறும் மாதிரி தோ்வுகளும் நடைபெறுகின்றன. விரைவில் இரண்டாம் நிலை காவலா் , டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் க்ஷண்ற்.ப்ஹ்/ள்ண்ஸ்ரீப்ஹள்ள் என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 17 சி, சிதம்பரம் நகா், பெருமாள்புரம் என்ற முகவரியில் உள்ள

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 0462- 2532938 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT