திருநெல்வேலி

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி சாலையில் உள்ள நீச்சல் குளம் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்

DIN

‘பொலிவுறு நகரம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையப் பணிகள், பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி சாலையில் உள்ள நீச்சல் குளம் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

2017-இல் தொடங்கப்பட்ட திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையப் பணிகள், நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமாகிவிட்டது. 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. நவம்பா் 30ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும் என உறுதியளித்துள்ளாா்கள். அதன்படி டிசம்பரில் பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்து வைப்பாா்.

சீவலப்பேரி சாலையில் உள்ள நீச்சல் குளத்தையும் ஆய்வு செய்தேன். அதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சில தொழில்நுட்பத் தவறுகள் நடந்துள்ளன. அது சரி செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT