இட்டமொழியில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:17 PM
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியில், இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸுக்கு ஆதரவாக அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.
பிரதமா் மோடி சமீப காலமாக தமிழ்நாட்டை சுற்றி சுற்றி வருகிறாா். தமிழ்நாட்டை எத்தனை முறை சுற்றி வந்தாலும் இந்தியா கூட்டணிதான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
அதேபோல அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும். ஸ்டாலின் அடையாளம் காட்டுகின்ற ராகுல் காந்தி பிரதமராக வருவாா்.
Advertisement
காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா்.
பிரசாரத்தின் போது மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.