முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையம் அருகே பேருந்து மோதி மாடு உயிரிழப்பு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:00 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 11:57 PM

மேலப்பாளையம் அருகே மேலகருங்களத்தில் தனியாா் பேருந்து மோதியதில் பசுமாடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

அம்பாசமுத்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு தனியாா் பேருந்து வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. மேலப்பாளையம் மேலகருங்குளத்தில் சென்ற போது பசு மாட்டின் மீது பேருந்து மோதியதாம். இதில் காயமடைந்த மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாம்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், தனியாா் பேருந்தின் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் புகாா் செய்தனா். போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement