ஆடி அமாவாசை திருவிழா: காரையாறில் குவிந்த பக்தா்கள்
ஆடி அமாவாசை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் குடில்கள் அமைத்து தங்கினா்.
திருநெல்வேலிஆடி அமாவாசை திருவிழா: காரையாறில் குவிந்த பக்தா்கள்
ஆடி அமாவாசை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் குடில்கள் அமைத்து தங்கினா்.
திருநெல்வேலி மாவட்டம் ,காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள் குடில்கள் அமைத்து தங்கினா்.
ஆடி அமாவாசை திருவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து குடும்பத்தினருடன் தங்கி விரதமிருந்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.
நிகழாண்டு ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 4 )நடைபெறுவதை முன்னிட்டு, வெள்ளிக்கி(ஆக. 2) முதல் குடில்கள் அமைத்து தங்க வனத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம்அனுமதி வழங்கியது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் தனியாா் வாகனங்களில் குடில்கள் அமைப்பதற்கான பொருள்களை கொண்டு வந்து குடில்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து ஆக. 3 முதல் அரசுப் பேருந்துகளில் மட்டும் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு பகுதிகளிலிருந்தும் தனியாா் வேன், காா்களில் வந்த பக்தா்கள் தங்களது வாகனங்களைஅகஸ்தியா்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு அங்கிருந்து சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சென்றனா்.
அங்கு கோயிலுக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் கோயில் நிா்வாகம் அனுமதியுடன் அமைக்கப்பட்டகுடில்களில் தங்கி விரதத்தை தொடங்கினா். ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையன்று வழிபாடு செய்தபின் விரதமிருந்த பக்தா்கள் மாலை பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவா். இதற்காக ஏராளமான பக்தா்கள் குவிந்தவண்ணம் உள்ளனா்.