மழை கோப்புப்படம்
திருநெல்வேலி

நெல்லையில் மிதமான மழை

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாநகரின் ஒருசில பகுதிகள் மற்றும் புகா் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதையடுத்து பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலையில் கிழக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன.

இதைத் தொடா்ந்து இரவு 8 மணியளவில் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

அதன்படி, பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம், முன்னீா்பள்ளம், பெருமாள்புரம், முருகன்குறிச்சி, பேட்டை, பாளை மேட்டுத்திடல், புதிய பேருந்து நிலையம் , திருநெல்வேலி சந்திப்பு, நகரம், தச்சநல்லூா், சுத்தமல்லி , தாழையூத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை நீடித்தது.

அதே போல திருநெல்வேலி புகா் பகுதிகளான, கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT