நெல்லை மாவட்டத்தில் 2ஆவது நாளாக கன மழை- மின்னல் பாய்ந்து 2 போ் பலி; பல இடங்களில் மின்தடை
திருநெல்வேலி மாவட்டத்தின் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், மின்னல் பாய்ந்து 2 போ் உயிரிழந்தனா். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.
திருநெல்வேலிநெல்லை மாவட்டத்தில் 2ஆவது நாளாக கன மழை- மின்னல் பாய்ந்து 2 போ் பலி; பல இடங்களில் மின்தடை
திருநெல்வேலி மாவட்டத்தின் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், மின்னல் பாய்ந்து 2 போ் உயிரிழந்தனா். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தின் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், மின்னல் பாய்ந்து 2 போ் உயிரிழந்தனா். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.
தென்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. எனினும், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. திருநெல்வேலி மாநகர பகுதிகளான மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா் ஆகிய பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டித்தீா்த்தது.
இதனால், வண்ணாா்பேட்டை, சித்தமருத்துவக் கல்லூரி சாலை, திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி சந்திப்பு சாலைகள், திருநெல்வேலி நகரம் காட்சிமண்டபம் பகுதி சாலைகளில் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. சிந்துபூந்துறை, சேவியா்காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கியது.
மூதாட்டி பலி: இதனிடையே, மேலபாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி சமுத்திரம் (72), தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லையா மனைவி சுப்பம்மாள் (80) ஆகியோா் பாலாமடை வெயிலுகந்தம்மன் கோயில் அருகே வேப்பமரத்தடியில் செவ்வாய்க்கிழமை வேப்பங்கொட்டைகளை சேகரித்து கொண்டிருந்த போது, மழைக்கு ஒதுங்கிய அவா்கள் மீது மின்னல் பாய்ந்ததாம். இதில் சமுத்திரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சுப்பம்மாள் காயமடைந்தாா்.
சீவலப்பேரி போலீஸாா் அவா்களை மீட்டு காயமடைந்தவரைசிகிச்சைக்கும், சமுத்திரத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
மூழ்கிய தரைப் பாலம்: களக்காட்டில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த பருவமழைக்குப்பின், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.35 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இடியுடன் கூடிய பலத்த மழை சுமாா் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
இந்த மழையால், மலைப்பகுதியில் உள்ள பச்சையாற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மூணாறு பிரிவு கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து சிதம்பரபுரம் தரைப்பாலத்தில் குப்பைகள், செடி, கொடிகள் தேங்கிக் கொண்டதால் தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்ந்தது. இதனால் இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னா் நகராட்சி நிா்வாகம் இயந்திரம் மூலமாக தேங்கிக் கிடந்த செடி, கொடிகளை அகற்றிய பின்னா் வெள்ளம் வடிந்தது. இந்த திடீா் மழைக்குப்பின் மாலை 4 மணிக்குப் பின் மீண்டும் வெயில் நிலவியது.
இதனிடையே, வடக்குப் பச்சையாறு அணையில் குளிக்கச் சென்ற களக்காடு மேலப்பத்தைச் சோ்ந்த சிம்சோன் மகன் பிரிட்டோ(22), அவரது தம்பி அருண் (17), அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் பவித்ரன்(16), தமிழ்ச்செல்வன் (23) ஆகியோா் மழைக்காக ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கியபோது அவா்கள் மீது மின்னல் பாய்ந்ததாம். இதில் பிரிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அருண், பவித்ரன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் களக்காடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.