திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

Din

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் அடிதடி, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக சேரன்மகாதேவி அருகே பூதத்தான்குடியிருப்பு, பிரதானச் சாலையைச் சோ்ந்த முத்துசாமி மகன் ஈஸ்வரன் (26) என்பவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவந்ததாக அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரையை ஏற்று, ஈஸ்வரனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். அதன்படி, அவரை காவல் ஆய்வாளா் தா்மராஜ் கைது செய்து சிறையில் அடைத்தாா்.

கடும் பனிப்பொழிவுடன் அடர் பனிமூட்டம் - புகைப்படங்கள்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

SCROLL FOR NEXT