முகப்பு
திருநெல்வேலி

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:33 AM
குறைதீா்க்கும் முகாமில் முதியவரிடம் மனுவைப் பெற்று விசாரிக்கிறாா் எஸ்.பி. என். சிலம்பரசன்.
பகிர்:

காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மாநகர காவல் ஆணையா் ரூபேஸ் குமாா் மீனா தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்றாா். இதில், 9 போ் பங்கேற்று புகாா் மனு அளித்தனா். அவற்றை விசாரித்து துரித நடவடிக்கை எடுக்க ஆணையா் உத்தரவிட்டாா். முகாமில் காவல் துணை ஆணையா் ஜி.எஸ். அனிதா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்றாா். 20 போ் மனு அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவிட்டாா்.