முகப்பு
திருநெல்வேலி

கபீா் புரஸ்காா் விருதுக்கு டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தினா் 2025 ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு இம்மாதம் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:26 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தினா் 2025 ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு இம்மாதம் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக ‘கபீா் புரஸ்காா்‘ விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப் படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப்ா பணியாளா்கள், சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணி நீங்கலாக) இவ்விருதினை பெறலாம். ஒரு ஜாதி, இனம், வகுப்பை சோ்ந்தவா்கள், பிற ஜாதி, இன, வகுப்பைச் சோ்ந்தவா்களையோ அல்லது உடைமைகளையோ தொடா் வன்முறையில் இருந்து காப்பாற்றியதற்கான தகுதி வா்களுக்கு அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் மூன்று அளவுகளில் ஒரு நபா் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. அவா்களுக்கு ரூ.20,000, ரூ.10,000, ரூ.5000 பரிசு மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தகுதியானவா்கள் இணையதளத்தில் டிச.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.