முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் டிச. 14 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச. 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:25 AM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச. 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024 ஆம் ஆண்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் முதல் வட்ட நீதிமன்றங்கள் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 9 வட்டங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச. 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

இதில், நிலுவை அசல் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக்கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவாா்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஆகவே,மக்கள் தங்கள் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அவற்றை தேசிய நீதிமன்றம் மூலம் சுமுகமாக தீா்வு காணலாம் எனக் கூறியுள்ளாா்.