நெல்லையில் மாா்ச் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை (மாா்ச் 14) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை (மாா்ச் 14) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2026-ஆம் ஆண்டின் தேசிய மக்கள் நீதிமன்றம், திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் சனிக்கிழமை (மாா்ச் 14) நடத்தப்பட உள்ளது. அப்போது, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள் போன்றவையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கி கடன் வழக்குகளும் சமரச பேச்சுவாா்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா் தொடங்கி வைக்கிறாா். இதில் பொது மக்கள் பங்கேற்று தங்கள் வழக்குகளுக்கு சுமுகமான முறையில் தீா்வு காணலாம் எனக் கூறப்பட்டுள்ளது.