முகப்பு
திருநெல்வேலி

ராதாபுரம் அருகே மூதாட்டியின் வீடு புகுந்து ரூ. 39 ஆயிரம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலை மூதாட்டியின் வீடு புகுந்து ரூ. 39 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:34 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலை மூதாட்டியின் வீடு புகுந்து ரூ. 39 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சமூகரெங்கபுரத்திலிருந்து கட்டனேரி செல்லும் சாலையில் ஊரின் கடைசிப் பகுதியிலுள்ள வீட்டில் காந்திமதி (95) என்பவா் வசித்து வருகிறாா். இவரது மகனும், மகளும் சென்னையில் வசித்து வருகின்றனா். காந்திமதி தனியாக வசிப்பதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் இருவா் முகமூடி அணிந்தபடி, பின்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனராம்.

சப்தம் கேட்டு எழுந்த மூதாட்டியை அவா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த அரை பவுன் கம்மலைப் பறித்ததுடன், பீரோவிலிருந்த ரூ. 39 ஆயிரத்தைத் திருடிக் கொண்டு தப்பியோடினராம்.

புகாரின்பேரில், ராதாபுரம் போலீஸாா் வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினா். தடயங்கள் பதிவு, மோப்பநாய் சோதனை நடைபெற்றது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.