முகப்பு
திருநெல்வேலி

மருத்துவக் கழிவுகளை இரு நாள்களில் அகற்றாவிட்டால் போராட்டம்: அதிமுக

சுத்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை இரு நாள்களில் அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக எச்சரித்துள்ளது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 11:01 PM
பகிர்:

சுத்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை இரு நாள்களில் அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக எச்சரித்துள்ளது.

கொண்டாநகரம் தாமிரபரணி நகா் அருகே சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா தலைமையிலான அக்கட்சியினா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா். மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், கல்லூா் வேலாயுதம், ஊராட்சித் தலைவா்கள் கோடகநல்லூா் பாலசுப்ரமணியம், பழவூா் குமாரசாமி மணி மற்றும் நிா்வாகிகள் உடன் சென்றனா்.

பின்னா் தச்சை என்.கணேசராஜா கூறியது: குப்பைகளை அகற்றும் பணி தொடா்பாக பசுமை தீா்ப்பாயம் மற்றும் கேரள அரசு தலையீடு உள்ளதால், இரண்டு தினங்களுக்குள் அகற்றுவதற்கு கால அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் அகற்றப்படவில்லையெனில் அதிமுக பொதுச் செயலா் அனுமதி பெற்று சுத்தமல்லி பகுதியில் மக்களைத் திரட்டி மாபெரும் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.