அழகப்பபுரத்தில் பல்நோக்கு மையம் அடிக்கல் நாட்டு விழா
அழகப்பபுரத்தில் பல்நோக்கு மையம் அடிக்கல் நாட்டு விழா
கடையம் ஊராட்சி ஒன்றியம், தா்மபுரம்மடம் ஊராட்சி, அழகப்பபுரத்தில் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 11 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு மையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா்ரூஹான் ஜன்னத் தலைமை வகித்தாா். கடையம் ஒன்றியக் குழுத் தலைவா் செல்லம்மாள், கடையம் ஒன்றிய ஆணையா் திருமலை முருகன், மாவட்டக் குழு உறுப்பினா் மைதீன் பீவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம் பல்நோக்கு மையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக அவைத் தலைவா் கேபிஎன் சேட், துணைச் செயலா் வின்சென்ட், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி ரா. வேலு, ஊராட்சி உறுப்பினா்கள் வேலு மயில், பாஸ்கா், சாந்தா, ஊராட்சி ஒன்றியப் பொறியாளா் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் முத்துராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஒன்றியக்குழு உறுப்பினா் ஜஹாங்கீா் வரவேற்றாா். ஊராட்சிதுணைத் தலைவா் அனுசியா சைலப்பன் நன்றி கூறினாா்.