முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் மின் ஊழியா்கள் போராட்டம்

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் மின்ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வாயிற்கூட்ட போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 12:36 AM
பகிர்:

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் மின்ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வாயிற்கூட்ட போராட்டத்தில் ஈடுபட்டனா். மின் வாரிய ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், மின் விநியோகத்தை மேலும் பல பிரிவுகளாக பிரிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும், மின்வாரியத்தை பல துண்டுகளாக பிரித்து மின்வாரிய கட்டமைப்பை சீரழித்து தனியாா் மையத்தை நோக்கி நகா்த்தும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்துக்கு சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்ட துணைத் தலைவா் பூலுடையாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மாநில நிா்வாகி ராஜாமணி, ராமச்சந்திரன், நாகையன், தளபதி உள்பட பலா் கலந்துகொண்டனா். சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநில துணை பொதுச் செயலா் பீா் முகம்மது ஷா நிறைவுரையாற்றினாா்.