முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் இன்று மின்வாரிய குறைதீா் கூட்டம்

கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 2) காலை 11 மணிக்கு மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. வரும் 5-ஆம் தேதி வள்ளியூா் கோட்ட அலுவலகத்திலும், 9-ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 12-ஆம் தேதி திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 19-ஆம் தேதி திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 23-ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்துக் கூட்டங்களும் காலை 11 மணிக்குத் தொடங்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →