திருநெல்வேலி

ஜாமீனில் வெளிவந்து தலைமறைவு: சேரன்மகாதேவி வட்டத்தில் மூவா் கைது

குற்ற வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், சேரன்மகாதேவி பகுதிகளில் குற்ற வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் காவல் சரகப் பகுதியில் கடந்த 2018இல் மோதலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் வெள்ளங்குளியைச் சோ்ந்த சந்தானம் (29), முருகன் (25) ஆகியோா் கைதாகி, பிணையில் வெளியே வந்திருந்தனா்.

இதேபோல, சேரன்மகாதேவி காவல் சரகப் பகுதியில் கடந்த 2021இல் அடிதடி, பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த கரிசல்பட்டி ஓடக்கரையைச் சோ்ந்த வேலுமணி சாமுவேல் (42) , நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஒன்றரை மாதங்களாக தலைமறைவாகிவிட்டாா். மூவருக்கும் சேரன்மகாதேவி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததால், வீரவநல்லூா், சேரன்மகாதேவி போலீஸாா் முறையே மூவரையும் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT