பாளை.யில் ஜூலை 6இல் மின்தடை
திருநெல்வேலி, ஜூலை 3: பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கேடிசிநகா், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகா், நீதிமன்ற பகுதி, சாந்திநகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கம் பகுதி, பாளை மாா்க்கெட் பகுதி, திருச்செந்தூா் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம் , பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைக்கொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மேலும், திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை, இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை. புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ. முருகன் தெரிவித்துள்ளாா்.