மாஞ்சோலைக்கு இன்றுமுதல் சூழல் சுற்றுலா செல்ல அனுமதி
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் சூழல் சுற்றுலாச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், துணை இயக்குநா் இளையராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘அம்பாசமுத்திரம் வனச்சரகம், மேற்கு தொடா்ச்சி மலை பகுதிகளில்பெய்து வந்த மழை குறைந்துள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் மாஞ்சோலை சூழல் சுற்றுலாசெல்ல தினமும் 10 வாகனங்களுக்கு (காா்) மட்டும் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.