மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியா் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புப் பணி ஜன. 19 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனால், 19ஆம் தேதி முதல் மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கும், பக்தா்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜன. 24ஆம் தேதியுடன் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததால், காலை 10 மணி முதல் மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் பயணிகள் குளிக்கவும், சொரிமுத்து அய்யனாா் கோயிலில் பக்தா்கள் வழிபடவும் வனத்துறையினா் அனுமதியளித்தனா்.
இதையடுத்து, சனிக்கிழமை அகஸ்தியா், மணிமுத்தாறு அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.