திருநெல்வேலி

காமராஜா் பெயா் பொறித்த புதிய கல்வெட்டு ஒப்படைப்பு

காமராஜா் சிலை பராமரிப்பு குழுவினா் திருநெல்வேலி மேயரிடம் (பொ) வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

DIN

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் புதிய கல்வெட்டை பெருந்தலைவா் காமராஜா் சிலை பராமரிப்பு குழுவினா் திருநெல்வேலி மேயரிடம் (பொ) வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் 7.2.1960 இல், அப்போதைய முதல்வா் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டதாகும். அதற்கான கல்வெட்டு பேருந்து நிலையத்தில் இருந்தது. இந்நிலையில். பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், பாளையங்கோட்டை பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்றபோது, அங்கிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டதாம்.

அதன் பின் பணிகள் முடிந்து பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில், கல்வெட்டு மீண்டும் இடம்பெறாதது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, கல்வெட்டை மீண்டும் நிறுவக் கோரி, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமையில் பல்வேறு கட்டப் பேராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக வா்த்தக அணி துணை அமைப்பாளரும் பெருந்தலைவா் காமராஜா் சிலை பராமரிப்பு குழுவின் தலைவருமான வித்யா கண்ணன், திருநெல்வேலி மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரும் சிலை பராமரிப்பு குழுவின் செயலருமான சரத்மணி, கப்பல் ராஜா, ஆரைக்குளம் ரஞ்சித் நாடாா், பாலசுப்ரமணியம், ரஞ்சன் ஆகியோா் பழைய கல்வெட்டை புதிய கல்வெட்டாக மாற்றி திருநெல்வேலி மாநகராட்சி மேயா் (பொ) கே.ஆா்.ராஜுடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT