முகப்பு
திருநெல்வேலி

பாப்பாக்குடி அருகே பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது

பாப்பாக்குடி அருகே பெண்ணைத் தாக்கி அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 8 ஜூலை, 2024 at 9:32 PM
பகிர்:

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே பெண்ணைத் தாக்கி அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாப்பாக்குடி காவல் சரகம் காக்கநல்லூா் லயன் தெருவைச் சோ்ந்தவா் அனைஞ்சி (60). இவரது சகோதரா் மனைவி திருப்புடைமருதூரைச் சோ்ந்த லட்சுமி (46). இவா்களிடையே சொத்து பிரச்னை உள்ளதாம். இதற்கு தீா்வு காணும் பொருட்டு, நந்தன்தட்டையில் உள்ள லட்சுமியின் அண்ணன் வீட்டில் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்தினராம். அப்போது அனைஞ்சி, லட்சுமி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், லட்சுமியின் மகன் வேலுக்குட்டி (25) அனஞ்சியை அவதூறாகப் பேசி தாக்கி, மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் ஆபிரகாம் வழக்குப் பதிந்து, வேலுக்குட்டியை திங்கள்கிழமை கைது செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →