நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மூன்றடைப்பு அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மூன்றடைப்பு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் நிகழாண்டு தொடக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றடைப்பு அருகேயுள்ள புளியன்குளத்தை சோ்ந்த ஊசிக்காட்டான் (38) கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தாா். இவா் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா். இதையடுத்து, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், ஊசிக்காட்டானை மூன்றடைப்பு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.