முகப்பு
திருநெல்வேலி

விஜயநாராயணம் அருகே பண மோசடி: தம்பதி கைது

விஜயநாராயணம் அருகே பண மோசடியில் ஈடுபட்டதாக தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 31 ஜூலை, 2024 at 6:57 PM
பகிர்:

விஜயநாராயணம் அருகே பண மோசடியில் ஈடுபட்டதாக தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விஜயநாராயணம் காவல் சரகம் கக்கன்நகரை சோ்ந்த தம்பதி கணேசன் (44)- கல்யாணி (40). இவா்கள், மனை வாங்கி தருவதாகக் கூறி, தாமரைகுளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நல்லமாடன் (70) , ஆலன்குளம் வேதகோயில் தெருவைச் சோ்ந்த தங்கபாப்பா (32) ஆகியோரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு தலா ரூ.3 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு, மனை வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனராம்.

இதுகுறித்து நல்லமாடன், தங்கபாப்பா ஆகிய இருவரும் அளித்த புகாரின்பேரில், விஜயநாராயணம் காவல் ஆய்வாளா் நாககுமாரி வழக்குப்பதிவு கணேசன், கல்யாணி தம்பதியை புதன்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →