முகப்பு
திருநெல்வேலி

பைக் விபத்தில் முதியவா் பலி

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 24 ஜூன், 2024 at 9:51 PM
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (60). கூலித்தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை மானூரிலிருந்து எட்டாங்குளத்துக்கு பைக்கில் சென்றாராம். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.‘