முகப்பு
திருநெல்வேலி

அம்பை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? மக்கள் அச்சம்

வனத்துறையினா் ஆய்வில்: சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்படவில்லை

Updated On : 25 ஜூன், 2024 at 8:39 PM
பகிர்:

அம்பாசமுத்திரம் நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டியதாக தகவல் பரவியதால் மக்கள் அச்சம் அடைந்தனா்.

அம்பாசமுத்திரம், மேலப்புதுத் தெரு மற்றும் புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து அந்தப் பகுதிமக்கள் அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கினா்.

இத்தகவலறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் இளையராஜா உத்தரவின் பேரில், அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலா் நித்யா தலைமையில் வனத்துறையினா் அந்தப் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனா். அந்தப் பகுதியில் மரநாய் நடமாட்டம் இருந்ததாகவும், அதைப் பாா்த்து சிறுத்தை என்று தகவல் பரவியதும் உறுதி செய்யபட்டது.

தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வனத்துறையினா், ‘சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்படவில்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம்; தகவலுக்கு அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்தை 04634 252594 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்’ எனத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →