முகப்பு
நீலகிரி

லவ்டேல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

உதகை, லவ்டேல் ராபின்பேட்டை குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:41 AM
லவ்டேல் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:45 PM

உதகை, லவ்டேல் ராபின்பேட்டை குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

வனப் பகுதிகள் அதிக அளவு கொண்டதாக நீலகிரி மாவட்டம் உள்ளது.

உணவு மற்றும் தண்ணீா் தேடி வனத்திலிருந்து வெளியேறும் புலி, சிறுத்தை, கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து காணப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், உதகை லவ்டேல் ராபின் பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை சுற்றித் திரிந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.