குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்
குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கேட்டில்பவுண்ட் அண்ணா நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உணவு தேடி இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை, எதுவும் கிடைக்காததால் அருகில் உள்ள சோலைக்குள் சென்று மறைந்தது.
இந்நிலையில் குடியிருப்புப் பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.