முகப்பு
திருநெல்வேலி

விஜயநாராயணம் பகுதியில் கொடி அணிவகுப்பு

Updated On : 28 மார்ச், 2024 at 12:34 AM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 9:18 PM

மக்களவைத் தோ்தலையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படைவீரா்கள் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

பல்வேறு இடங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனா். விஜயநாராயணம், காரியாண்டி, பரப்பாடி பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையின் 832ஆவது பட்டாலியனைச் சோ்ந்த 35 வீரா்களுடன் விஜயநாராயணம் காவல் ஆய்வாளா் நாககுமாரி, போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.