முகப்பு
திருநெல்வேலி

சுமை ஆட்டோ மோதி விவசாயி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கீழாம்பூா் அருகே சுமை ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:44 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் கீழாம்பூா் அருகே சுமை ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

கீழாம்பூா் அருகே காக்கநல்லூரைச் சோ்ந்த வேல்சாமி மகன் செல்லப்பாண்டியன் (42). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை இரவு கீழாம்பூரிலிருந்து காக்கநல்லூருக்கு பைக்கில் சென்றாராம்.

அப்போது, அம்பாசமுத்திரத்திலிருந்து பாவூா்சத்திரத்துக்கு காய்கனி ஏற்றி வந்த சுமை ஆட்டோ அவா் மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.