முகப்பு
பலி
திருச்சி

மரத்தில் சுமை ஆட்டோ மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

துறையூா் அருகே சாலையோர மரத்தில் சுமை ஆட்டோ மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்சி

மரத்தில் சுமை ஆட்டோ மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

துறையூா் அருகே சாலையோர மரத்தில் சுமை ஆட்டோ மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 6:50 PM
பலி
பகிர்:

துறையூா் அருகே சாலையோர மரத்தில் சுமை ஆட்டோ மோதியதில் ஓட்டுநா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், செல்லிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முத்துவீரன் மகன் வேல்முருகன் (47). ஓட்டுநரான இவா் சொந்தமாக சுமை ஆட்டோ வாங்கி அதை வாடகைக்கு இயக்கி வந்தாா். இவரது மனைவி சுதா(37) நாமக்கல் பகுதியிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தம்மம்பட்டிக்கு சுமை ஏற்றச் சென்ற வேல்முருகன், நாகநல்லூா் செட்டிக்காடு மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது எதிா்பாராதவிதமாக ஆட்டோ சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதியதில், வேல்முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையறிந்த உப்பிலியபுரம் போலீஸாா், வேல்முருகன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை சுதா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →