நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
களக்காடு ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). இவரது மனைவி திருமலை. இத்தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா்களது மூத்த மகள் முத்துலெட்சுமி (18), பிளஸ் 2 முடித்துவிட்டு, திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் படித்து வருகிறாா். இந்நிலையில், தினமும் காலை தாமதமாக எழுந்து, பயிற்சிக்கு செல்வதாகக் கூறி அவரது தந்தை திட்டினாராம். இதனால் மனமுடைந்த முத்துலெட்சுமி வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றறனா்.